சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்திருப்பதை எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி - அன்புமணி சந்திப்பின் போது அ.தி.மு.க. தரப்பில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும், பா.ம.க. தரப்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் உடனிருந்தனர்.
"எங்கள் கூட்டணி ஒரு இயற்கை கூட்டணி. இது வெற்றி கூட்டணி" என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் உற்சாகமாகத் தெரிவித்தார். பா.ம.க. தரப்பில் 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதி செய்யப்பட்ட தொகுதிகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!