விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் ஒரு பேரிடி கிடைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், வெளியான இரண்டே நாட்களில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.
ஆனால், இப்படத்தின் கதைக்களம் அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமானது என்பதால், தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் பரவினாலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பொங்கல் ரேஸில் இருந்து ‘பராசக்தி’ பின்வாங்குமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்து இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தணிக்கை சிக்கலில் சிக்கியிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.