அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக உடனான கூட்டணி குறித்து தன்னிடம் எந்தவிதமான நேரடி பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் ’அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்று சுட்டிக்காட்டியதோடு, அவருடன் கூட்டணி குறித்து பேசுவது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும், அது செல்லாது என்றும் அதிரடியாக கூறினார்.
நாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறும் டாக்டர் ராமதாஸ் தன்னிடம் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார். அன்புமணி தரப்பை தவிர்த்துவிட்டு, ராமதாஸ் தன்னிடம் நேரடியாக பேசினால் மட்டுமே அதிமுக - பாமக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
Edited by Mahendran