சென்னையில் அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை கருத்தில் கொண்டு, அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் இயக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், மின்சாரத்தில் இயங்கும் புதிய டபுள் டெக்கர் பேருந்துகளை இம்மாத இறுதிக்குள் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, பொதுப் பயன்பாடு மற்றும் சுற்றுலா நோக்கில் தனியார் பங்களிப்புடன் டபுள் டெக்கர் சோதனைப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. தற்போது, பட்டினப்பாக்கம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டபுள் டெக்கர் பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். தரச்சான்றிதழ் கிடைத்தவுடன், சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மின்சார டபுள் டெக்கர் பேருந்தில் முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் உள்ளன. கீழ்தளத்தில் 29 இருக்கைகள், மேல்தளத்தில் 36 இருக்கைகள் என மொத்தம் 70 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி கேமராக்கள், குளிர்சாதன வசதி மற்றும் அவசர காலத்தில் கண்ணாடிகளை உடைத்து வெளியேற உதவும் பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!