விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கலால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் சதி என்றும், விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்கவே பாஜக இவ்வாறு செய்வதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த குஷ்பு, “விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவது சகஜம் தான். ஆனால், திரையரங்குகளுக்கு வரும் அந்தக் கூட்டம் எல்லாம் தேர்தலில் வாக்குகளாக மாறுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய்யின் ரசிகை என்ற முறையில் அவரது கடைசிப் படம் இப்படிச் சிக்கலில் இருப்பது எனக்கும் வருத்தமே” என்று தெரிவித்தார். மேலும், “பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், வரும் நாட்களில் இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும்” எனத் தெரிவித்த அவர், விஜய்யின் வருகை பாஜக கூட்டணிக்குத் தேவையா? இல்லையா? என்பதை மேலிடம் முடிவு செய்யும் என மழுப்பலாகப் பதிலளித்தார்.