ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 75 லட்சத்திற்கு வாங்கிய சர்ஃபராஸ் கான், தற்போது சிஎஸ்கே அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், புயலெனக் களமிறங்கிய சர்ஃபராஸ், வெறும் 20 பந்துகளில் 62 ரன்களை விளாசித் தள்ளியுள்ளார்.
இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த அவர், அபிஷேக் சர்மா வீசிய ஒரு ஓவரில் 6, 4, 6, 4, 6, 4 என 30 ரன்களைக் குவித்து மைதானத்தை அதிர வைத்தார்.
சர்ஃபராஸ் கானின் இந்த ‘பேயாட்டம்’ சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி வரும் நிலையில், மிடில் ஆர்டரில் சர்ஃபராஸின் இந்த அபாரமான ஃபார்ம் சிஎஸ்கே அணிக்குத் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
அதே சமயம், அவரது இந்த அதிரடி ஆட்டம் தோனியின் இடத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
தோனியை ‘இம்பாக்ட் பிளேயராக’ மட்டும் பயன்படுத்திவிட்டு, மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானை களமிறக்க சிஎஸ்கே நிர்வாகம் யோசிக்கலாம் எனத் தெரிகிறது.