திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கோரி ராமர் ரவிக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் சிலர் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தாலும், இதுவரை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேவியட் தாக்கல் செய்துள்ள இந்த மனு, ஆன்மீகவாதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran