இன்று ஒரு பெரிய பண்டிகையாக மாறி இருக்கும். ஆம் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்று தான் ரிலீஸாக இருந்தது. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு அதில் சில காட்சிகளை மாற்றம் செய்ய சொல்லி அந்த மாற்றங்களையும் படக்குழு செய்து மீண்டும் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி இருந்தார்கள்.
தணிக்கை குழு சான்றிதழை கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் பட நிறுவனம் தணிக்கை சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்கள். அது சம்பந்தமான வழக்கு தான் இப்போது நடந்து வருகிறது. இன்று அதற்கான தீர்ப்பு வெளிவந்தது. சான்றிதழ் கொடுக்க உத்தரவை பிறப்பித்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. ஆனால் தணிக்கை வாரியம் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது .
அவசர வழக்காக இன்று மாலை அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இப்போது தணிக்கை வாரிய தரப்பும் தனி நீதிபதி அளித்த அந்த உத்தரவு குறித்தும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் தணிக்கை வாரியம் இதை விடுவதாகவும் தெரியவில்லை .இப்படி இருக்கும் சூழ்நிலையில் சரத்குமார் இது பற்றி அவருடைய கருத்துக்களை கூறியுள்ளார்.
அரசியல் தலைவராக இருப்பதினால் தான் விஜய்க்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாமா என்ற ஒரு கேள்வி சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அது நீங்களாகவே நினைத்துக் கொள்வது. சென்சார் போர்டு அவங்க வேலையை செய்துள்ளார்கள். இப்போதுதான் ஒரு படத்தை நிறுத்துகிறார்களா? இதற்கு முன் எத்தனை படங்கள் சென்சார் போர்டால் நிறுத்தப்பட்டிருக்கிறது>
ஏன் தக் லைஃப் திரைப்படத்திற்கு கூட நடந்தது. ஏன் விஜய் இதற்கு முன்பு அவருடைய படத்திற்காக ஜெயலலிதாவை பார்க்க போகவில்லையா? ரோட்டில் நிற்கவில்லையா? இதெல்லாம் நடப்பது என்பது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலால் தான் நடக்கிறது என்கிற எண்ணத்தை நாம் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் சென்சார் போர்டு இதை செய்ய வேண்டும் ?ஒரு படத்திற்கு சென்சார் போர்டு கட் கொடுக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ மாற்றம் செய்ய வேண்டும் என்று தானே அர்த்தம்.

சென்சார் போர்டில் அது சம்பந்தமான உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் போய் உட்காரவில்லை. ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது ஏன் எனக்கும் இருக்கிறது என சரத்குமார் கூறியிருக்கிறார்.