சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்திலிருந்து, தணிக்கை குழுவால் நீக்கப்பட்ட ஒரு அதிரடி காட்சி தற்போது டிவி ப்ரோமோவாக வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் “அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!” என்ற அனல் பறக்கும் வசனம் இடம்பெற்றுள்ளது. படத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட ஒரு காட்சியை, புத்திசாலித்தனமாக விளம்பரமாக வெளியிட்டு படக்குழுவினர் பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.
அரசியல் பேசும் இந்த வசனம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “சென்சார் போர்டு கட் பண்ணினா என்ன, நாங்க டிவியிலேயே காட்டுவோம்” என படக்குழு செய்திருக்கும் இந்த அதிரடி மூவ் செம ஹிட் அடித்துள்ளது. நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.