சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று போலீசார் ஒரே பைக்கில் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பைக்கை ஓட்டும் போலீஸ் அதிகாரி ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஒரு பைக்கில் மூன்று பேர் செல்வது போக்குவரத்து விதிகளின்படி மிகப்பெரிய குற்றமாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பின்னால் அமர்ந்திருக்கும் போலீசாரின் சீருடையில் “உத்தரப் பிரதேச போலீஸ்” என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் இப்படி ஒரு பைக்கில் மூன்று பேர் சென்றால், உடனே அபராதம் விதிக்கும் போலீசார், தாங்களே அந்த விதியை மீறலாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“சட்டம் என்பது எல்லாருக்கும் பொதுவானதுதானே? அல்லது போலீசாருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா?” என நெட்டிசன்கள் ஆவேசமாகச் சாடி வருகின்றனர். விதிமீறலில் ஈடுபட்ட இந்த போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.