நடிகர் மற்றும் கார் பந்தய வீரர் அஜித்குமார், 'குட்பேட் அக்லி' படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் அஜித்குமார் தனது அணியினருடன் கலந்து கொண்டார். அத்துடன், 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த கார் பந்தயத்துக்கு நடுவே அஜித்குமார் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
'நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அனைவருக்கும் சிறந்த மற்றும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.