||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஜன.12श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
மார்கழி ~ .. 28
( 12 1.2026 ) திங்கள் கிழமை*
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம்~ மார்கழி மாஸம் { தனுர் மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 3.38 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 11.54 வரை ஸ்வாதி பின் விசாகம்
யோகம் ~ த்ருதி
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.38
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ நவமி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (12-1-2026) ராசி பலன்கள்
மேஷம்வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கைகூடும்.
பரணி : வரவுகள் ஏற்படும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
சஞ்சலமான சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். நெருக்கடியான சில பிரசனைகளுக்கு ச் பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
மிருகசீரிஷம் : பொறுப்புடன் செயல்படவும்.
கலை சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அலுவல் பணிகள் சற்று குறையும். நாவல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : பணிகள் குறையும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணம் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதார விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : பணிகளில் கவனம்
மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
புத்திரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இலக்கிய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் சேமிப்புகள் குறையும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
அஸ்தம் : சேமிப்புகள் குறையும்.
சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
பணி புரியும் இடத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்தை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளின் ஆர்வமின்மை ஏற்படும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். எண்ணங்களின் போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : சங்கடங்கள் மறையும்.
சுவாதி : ஏற்ற இறக்கமான நாள்.
விசாகம் : பயணம் மேம்படும்.
இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
பழைய பிரச்சனைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடலை வருத்திய இன்னல்கள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
பூராடம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : புதுமையான நாள்.
திருவோணம் : பொறுப்புகள் மேம்படும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
உணவு செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : நெருக்கடியான நாள்.
சதயம் : மதிப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.
நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை உருவாக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : திறமை வெளிப்படும்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறைமறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
பஞ்சாங்கம் ஜன.12 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil