சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய வானிலை அறிக்கைப்படி, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம்.நாளை (12-01-2026) நிலை தொடர்ந்தே இருக்கும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மேலும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
11-01 மற்றும் 12-01-2026: தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மிக பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை; வெப்பநிலை இயல்புக்கு ஏற்றாக இருக்கும்.
13-01 முதல் 15-01-2026 வரை: குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் படிப்படியாக குறையும், இயல்பை விட குறைவாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வானிலை:
இன்று: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸ்.
நாளை: வானம் மேகமூட்டத்துடன் தொடரும்; சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸ்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது போன்ற மேகமூட்டத்துடன் மழைக்கான எச்சரிக்கை அளித்துள்ளது, பொதுமக்கள் தேவையான முன்னறிவு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.