ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தொடங்கியது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 31 மாகாணங்களில் 100 நகரங்களில் இரண்டு வாரங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.
View this post on InstagramA post shared by The Guardian (@guardian)
போராட்டத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டதால் வெளி உலகுக்கு தகவல்கள் முழுமையாக செல்லவில்லை. இருப்பினும் அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று, இதுவரை 116 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 2,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள், கலகக்காரர்கள், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இத்தகைய செயல்கள் கடவுளுக்கு எதிரான போராக கருதப்படும் என்றும், மரண தண்டனை வரை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன ஆகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!