மிஸ் பண்ணாதீங்க... இன்று மதியம் நெல்லையில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கம்!
Dinamaalai January 18, 2026 01:48 PM

மிஸ் பண்ணாதீங்க. பொங்கல் தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் வழக்கமான பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைத் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக இன்று  மதியம் நெல்லையிலிருந்து தாம்பரம் வரையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து இன்று ஜனவரி 18ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், நாளை ஜனவரி 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும். வண்டி எண்: 06178 கொண்ட இந்தச் சிறப்பு ரயில் வழக்கமான பிரதான வழித்தடத்திற்குப் பதிலாக தென்காசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகோங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.