காதலர் தின ஸ்பெஷல்: ஓசூர் ரோஜாக்களுக்கு உலகளவில் மவுசு - 10 லட்சம் ரோஜாக்கள் விற்பனை!
Dinamaalai February 14, 2026 03:49 PM

ரெட் ரோஸ் இல்லாமல்  காதலர் தினக் கொண்டாட்டமா? உலகளவில் ஓசூர் ரோஜாக்களுக்கு இந்த வருடமும் மவுசு எகிறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் ரோஜாக்கள், வழக்கம் போல் இந்த வருடமும் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காக ஓசூரில் இருந்து நாள்தோறும் சுமார் 10 லட்சம் ரோஜா மலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

சிங்கப்பூர், மலேசியா, துபாய் (வளைகுடா நாடுகள்), ஆஸ்திரேலியா, லெபனான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இதுவரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் அதிகப்படியான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாக, ரோஜா பூக்களின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது: ஏற்றுமதி தரம் கொண்ட ஒரு ரோஜா பூவின் விலை பண்ணையிலேயே ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையாகிறது. சில்லறை சந்தையில் இது ரூ.100 வரை எட்ட வாய்ப்புள்ளது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா, கடந்த காலங்களில் ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.800 முதல் ரூ.1,100 வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச விலையாகும்.

ஓசூரில் சுமார் 22 வகையான ரோஜாக்கள் பயிரிடப்பட்டாலும், காதலர் தினத்தில் 'தாஜ்மஹால்' (Taj Mahal) ரக அடர் சிவப்பு ரோஜாக்களே முதலிடம் பிடிக்கின்றன. இதன் அடர் சிவப்பு நிறம், வெல்வெட் போன்ற இதழ்கள் மற்றும் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும் தன்மை (Long shelf life) சர்வதேச சந்தையில் இதற்குப் பெரும் மதிப்பைத் தேடித்தருகிறது. கோல்ட் ஸ்டிரைக் (மஞ்சள்), நோப்ளாஸ், அவலஞ்சர் (வெள்ளை) போன்ற ரகங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்கால நோய்த் தாக்குதலால் இந்த ஆண்டு உற்பத்தி சுமார் 40% குறைந்துள்ளது. வழக்கமாக ஒரு கோடி மலர்கள் உற்பத்தியாகும் இடத்தில், இந்த ஆண்டு 60 முதல் 70 லட்சம் மலர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த ஆண்டு இணையவழி வர்த்தகம் ஒரு கேம்-சேஞ்சராக அமைந்துள்ளது. பிளிங்கிட், ஜெப்டோ போன்ற செயலிகள் மூலம் ஒரு பூ ரூ.500 வரை விற்கப்படுவது விவசாயிகளுக்குப் புதிய லாப வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.