தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 13) வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் பேசிய முதல்வர், “சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முடக்க டெல்லியில் சிலர் (மத்திய அரசு/பாஜக தரப்பு) முயற்சி செய்து வருகிறார்கள். என் சகோதரிகளின் உரிமையைப் பறிக்க நடக்கும் இந்தச் சதியை முறியடிக்கவே, மூன்று மாத முன்பணம் ₹3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ₹2,000 என மொத்தம் ₹5,000 இன்று ஒரே நாளில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதால், தேர்தலின் போது எந்தத் தடையும் இன்றி பெண்களுக்கு நிதி போய்ச் சேருவதை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“>