தங்கத்தின் மீதான முதலீடு மற்ற நாடுகளை விட இந்தியாவில் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக விஷேச நாட்கள் மற்றும் திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக்காணப்படுகிறது. அதேநேரம் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்ற கனவு கானல் நீராக மாறியுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது 2026ஆம் வருடம் புதிய உச்சமான 1.34 லட்ச்சத்தை எட்டி ஷாக் கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமே என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் வர்த்தக்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தையில் முதலீட்டிற்கு பதிலாக அதிகளவு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை ஏற்றமாகவும், இறக்கமாகவும் இருந்து வருகிறது.
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 300 ரூபாய் அதிகரித்து 15,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்று 5 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.