அப்பா – அம்மா திருமணத்திற்கு நோ… கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மட்டும் ஸ்பெஷல் ஃபிளைட்டா?… நடிகர் விஜய்யைச் சுற்றும் சர்ச்சைகள்…!!!
SeithiSolai Tamil March 02, 2026 05:48 PM

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் மற்றும் அவரது பெற்றோர் இடையிலான உறவு குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரின் 60-வது திருமண நாள் கொண்டாட்டத்தில் மணிவிழா விஜய் நேரில் கலந்து கொள்ளாதது அப்போது பெரும் பேசுபொருளாக மாறியது.

மேலும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாகவே அவர் இந்த நிகழ்வைத் தவிர்த்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இருப்பினும், தனது நெருங்கிய நண்பர் மற்றும் தயாரிப்பாளரின் மகளான கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் காட்டிய முக்கியத்துவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் சென்றது தற்போது வைரலாகி வருகிறது. சொந்தப் பெற்றோரின் முக்கிய விழாவிற்கு வராதவர், சினிமா தோழமையின் திருமணத்திற்கு இவ்வளவு மெனக்கெடல் காட்டியது ஏன் எனச் சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.