கைகாசு போட்டு 4 கோடிக்கு டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயன்..அம்பலபடுத்திய பிரபலம்
ராகேஷ் தாரா March 03, 2026 04:44 PM

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அண்மையில் வெளியான தாய்கிழவி திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்திற்கு முதல் நாள் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணம் 50 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கி ரசிகர்களை பார்க்க சொன்னதாக வலைபேச்சு யூடியுப் சேனலில் பிஸ்மி கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக வெளியான பராசக்தி , மதராஸி ஆகிய படங்களுக்கும் இதே போல் தனது சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கியதாக சிவகார்த்திகேயன் பற்றி கூறியுள்ளார். 

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள முதல் படமாகும். ஆனால் தாய்கிழவி படம் வெளியாவதற்கு முன்பே ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் செயோன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதுவே தாய்கிழவி படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைந்தது. மேலுல் திரைத்துறையினர் பல இப்படத்தையும் நடிகை ராதிகாவின் நடிப்பையும் பாராட்டியது மக்களிடம் இப்படம் பெரியளவில் வரவேற்பைப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. 

4 நாள் வசூல் 

தாய்கிழவி திரைப்படம் சுமார் ரூ 10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

4 கோடி கொடுத்து டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயன் 

தாய்கிழவி திரைப்படம் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் இப்படம் மக்களிடையே சரியாக சென்று சேருமா என்கிற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இதனால் சிவகார்த்திகேயன் முதல் நாளில் படத்திற்கு 50 லட்சம் செலவு செய்து டிக்கெட்களை வாங்கி ரசிகர்களுக்கு கொடுத்து பார்க்க சொன்னதாக வலைபேச்சு யூடியுப் சேனலில் பிஸ்மி கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பராசக்தி படத்திற்கு ரூ 4 கோடிக்கு டிக்கெட் வாங்கியதாக கூறியுள்ளார். பராசக்தி படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடியில் 4 கோடி சிவகார்த்திகேயன் வாங்கிய டிக்கெட். அதேபோல் மதராஸி படத்திற்கும் இதேபோல் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கி படத்தை ப்ரோமோட் செய்துள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.