திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் வர முடியும்: அமைச்சர் ரகுபதி
Top Tamil News March 03, 2026 10:48 PM

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்ச் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மோதிரம் அணிவித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறைந்த கட்சி தான் உள்ளது. அவர்கள் கூட்டணியை ஆரம்பித்து பேச்சு வார்த்தையை தொடங்கவில்லை. யார் மேஜர் பார்ட்னர் யார் மைனர் பார்ட்னர் என்ற முடிவும் வரவில்லை. அதனால் அதிமுக கூட்டணியில் திமுக கூட்டணியையும் ஒப்பிடக்கூடாது. அதிமுக கூட்டணி இடியாப்பச்சிக்கள். நாங்கள் கூட்டணி சமூகமாகத்தான் பேசுவோம் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணியை சரியான பாதையில் கூட்டணியில் கொண்டு செல்வார். தவெகவுடன் காங்கிரஸ் திறைமறைவு பேச்சுவார்த்தை அப்படியெல்லாம் கப்சாவாக கிளப்பி விடுகின்ற விஷயம். எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். 

விஜய் இடம் யாரும் செல்லாததால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை விஜய் புரிந்திருக்கலாம். அவ்வளவுதான் ஆள் இல்லாத வீட்டில் என்ன வேணாலும் கொண்டாடலாம். தவெக ஆளில்லா வீடு. மக்களுக்காக கொடுக்கின்ற பணம்தான். தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருப்பார்கள் அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் பணத்தை எல்லாம் கொடுத்த அவரிடம் வாக்குகளை பெற முடியாது. சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும் எங்களது சாதனைகளை மக்கள் மனதில் இருக்கின்றது அதன் மூலமாக நாங்கள் வாக்குகள் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அதிமுகவை டெபாசிட் இழக்க கூடிய சூழ்நிலை சில தொகுதியில் உருவாக்கி இருக்கிறது அதை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம். எங்களது கனவு உண்மையான கனவு. எங்களது நினைவும் உண்மையான நினைவு. 200 நிச்சயம். வெல்வோம் 200 படைப்போம் வரலாறு அதில் தமிழ்நாடு சரித்திரத்தின் வரலாறாக இருக்கும். நாங்கள் வீடு வீடாக  டோர் டோராக பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத வகையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வீடு வீடாக சென்று மகளிர் பரப்புரையை மேற்கொண்டுள்ள ஒரே இயக்கம் திமுக தான். ஒவ்வொரு வீட்டு வாசலையும் தொட்டு விட்டு வந்திருக்கின்றோம். ஒவ்வொரு வாக்காளரையும் ஒரு முறையல்ல இரு முறை சந்தித்து விட்டு வந்திருக்கின்றோம். 

திமுகவில் இருக்கின்றவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்ற கூடியவர்கள் என்று திமுகவின் தலைமைக்கு நன்றாக தெரியும். அவர்கள் என்றைக்கும் வந்தாரை வரவேற்பவர்கள் அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் திமுகவில் இருக்கிறார்கள் தவிர அவர்களை எல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கு கிடையாது. எங்களைப் பொறுத்தவரை யார் வந்தாலும் அவர்களது தகுதிக்கேற்றவாறு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் கட்சித் தலைவர் எந்த முடிவையும் எடுப்பார் எந்த பதவியையும் கொடுப்பார். மதுபான ஊழல் என்று சொல்லி அரவிந்த் கெஜ்ரிவால் மீது போட்டு ஆம் ஆத்மி கட்சியை தேர்தல் நேரத்தில் மிகவும் சிரமப்பட வைத்தனர். ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்வதில் மிக மிக வல்லமையான கட்சி பாஜகவும் பிரதமர் முடியும் தான். அந்த குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் போட்ட அனைத்து வழக்குகளுமே அடிபட்டுவிட்டது. இந்த குற்றச்சாட்டையும் இதுவரை நிருபிக்கவில்லை யாரையும் குற்றவாளியாக கொண்டு போய் நிறுத்த முடியவில்லை. எங்களைப் பொறுத்தவரை அத்தனை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து எங்கே கொண்டு போய் வைப்பது. அவருக்கு தான் தெரியும் அவர் பல நாடுகளுக்கு சென்று சொத்துக்களை வாங்கி இருக்கலாம் அம்பானியும் அதன் கையில் வைத்துக் கொண்டு அவர்களது துணையோடு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை எங்களை பொறுத்தவரை நாங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை எந்த நீதிமன்றையும் எந்த வழக்கையும் சந்திப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம். 

குஜராத்திளையும் ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலையும் அங்கே எல்லாம் சட்டம் ஒழுங்கை சென்று பிரதமர் மோடி பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் வந்து சட்டம் ஒழுங்கை பற்றி பேசினால் நன்றாக இருக்கும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என் மீது எந்த விமர்சனத்தையும் நீதிபதி வைக்கவில்லை. நீதிபதி மீது அனா அவசிய குற்றச்சாட்டை சொல்லி மாற்றிக் கொள்ளாதீர்கள். நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னால் அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டியது இந்திய குடிமகனின் கடமை. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது நீதிமன்றம் தான். நீதிமன்றம் சொல்வதை சரியாக இருக்கிறதா தவறாக இருக்கிறதா என்ற விளக்கத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதில் மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம். உச்சநீதிமன்றம் சொல்வது இறுதி முடிவு. உச்சநீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றால் உயர்நீதிமன்றம் சொல்வது இறுதி முடிவு. இதுதான் இன்றைய நிலைமை. எங்களைப் பொறுத்தவரை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். 118 இடங்களுக்கு மேலே வெற்றி பெற்றால் தனி பெரும்பான்மை தான். எங்களுடைய திமுக 120 இடங்களில் வெற்றி பெற்று விடும் நாங்கள் கூட்டணியை அரவணைத்து செல்பவர்கள். அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து அரவணைத்து செல்வோம். தனிப்பட்ட முறையில் ஆட்சியை பிடிக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறும்.  இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை அதனால் அகம்பாவம் பிடித்து சொல்லக்கூடாது. எது வந்தாலும் நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திமுக” என்று தெரிவித்தார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.