தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் கடந்த 1977- ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின், துர்கா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் திரைத்துறையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தடம் பதிந்து வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்ததுடன், 2019- இல் திமுக நடத்திய கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க தொடங்கினார். பின்னர், அதே ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதுடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இவரது பிரசார யுக்தி திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவாக அமைந்தது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் வெற்றிபின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 93 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியல் அங்கம் வகித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஏ. வி. ஏ. கஸ்ஸாலியை வீழ்த்தி 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இதைத் தொடர்ந்து, 2022- இல் டிசம்பர் 14- ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க: சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..
மிக குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்து உதயநிதி ஸ்டாலின்பின்னர், 2024- ஆம் ஆண்டு தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதுடன் மிகக் குறுகிய காலத்தில் முக்கிய அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தார். இவர், தனது துறையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் மற்றும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தினார். மேலும், தனது தொகுதியில் ரோபோடிக் கழிவு நீர் அகற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதுடன், இவரது தனது கொள்கையான சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தேசிய அளவில் விவாதங்களையும், ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் பெற்றிருந்தது.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தாெகுதியில் மீண்டும் உதய நிதி போட்டிதற்போது தமிழகத்தின் 3- ஆவது துணை முதல் அமைச்சராகவும், இளம் வயது முதலவராகவும் இருந்து வருகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழகத்தின் துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில், அவரை எதிர்த்து களம் இறக்கப்படும் கட்சியின் வேட்பாளரை பொறுத்து தேர்தல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு… எவ்வளவு தெரியுமா?