'பனையூர்' கட்சியின் தலைவரை சுற்றி தற்போது ஒரு பெரும் குடும்ப சர்ச்சை வெடித்து, அது நீதிமன்றம் வரை சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக தங்களுக்குள் இருந்த மோதல், தற்போது சட்ட ரீதியான மனுவாக தாக்கல் செய்யப்பட்டவுடன், பனையூர் தரப்பு பெரும் பதற்றமடைந்துள்ளது.
அந்த மனுவை திரும்ப பெற சொல்லி தலைவரின் தரப்பிலிருந்து வழக்கறிஞர்கள் மூலம் பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் அதற்கு சற்றும் இணங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியே கசிந்துவிடாமல் இருக்க பணபலம் உள்ளிட்ட பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்குள் உள்ளூர் ஊடகங்களில் செய்தி கசிந்துவிட்டது. குறிப்பாக, 'கதர்' கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த சர்ச்சை கூட்டணியை பாதிக்குமோ என்ற அச்சம் பனையூர் கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த விவகாரத்தை காரணம் காட்டி கூட்டணி கட்சிகள் பின்வாங்கினால், அது அக்கட்சியின் தேர்தல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva