ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்த சூழலில், தமிழகம் உள்ளிட்ட 05 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, பிசிசிஐ முழுமையான போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் செய்து வருகிறது.
இந்த ஆண்டு, ஐபிஎல் தொடக்க விழா மற்றும் சீசனின் முதல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியைநாட்டை உலுக்கியது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, அங்கு போட்டி நடைபெறாது என கூறப்பட்டது.

ஆனால், கர்நாடக அரசு, தற்போது இந்த மைதானத்தில் போட்டிகளை நடத்தப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தொடரின் முக்கியமான பிளே-ஆஃப் சுற்றின் ஒரு போட்டி மற்றும் இறுதிப்போட்டி இங்கு நடத்தப்படலாம் எனத் எதிர் பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணி தனது 07 உள்ளூர் போட்டிகளில் 05 போட்டிகளைச் சின்னசாமி மைதானத்தில் விளையாடும் எனவும், மீதமுள்ள 02 போட்டிகள் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.