Rukmini Vasanth: தேவையற்ற ஜூம்கள்.. தவறாக பயன்படுத்தப்படும் நடிகைகளின் போட்டோஸ் – ருக்மிணி வசந்த் கண்டனம்!
TV9 Tamil News March 04, 2026 12:48 AM

நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) கன்னட சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த 2023ம் ஆண்டில் ரக்ஷித் ஷெட்டியின் நடிப்பில் வெளியான “சப்த சாகரதாச்சே எல்லோ” (Sapta Saagaradaache Ello) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் தனது எமோஷ்னலான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களையும் கவர்ந்தார். இதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. தெலுங்கிலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்திருந்தது. இந்த வரிசையில் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஏஸ் (Ace). கடந்த 2025ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் வெளியான இந்த படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக நுழைந்தார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் (Sivakarthkeyan) மதராஸி (Madharaasi) படத்திலும் நடித்து புகழப்பட்டார். மேலும் நெகடிவ் வேடத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்து, நேஷனல் கிரஷ் ஆகவே மாறிவிட்டார் என்று கூறலாம்.

இந்நிலையில் சமீபகாலமாக சினிமாவில் பெண் நடிகைகளின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்திவரும், தேவையில்லாத ஆங்கிளில் புகைப்படங்களை பகிர்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் சினிமாவில் இருக்கும் பெண் நடிகைகளுக்கு ஆதவராகவும், புகைப்படங்கள் தவறாக பயன்படுத்துவதை நடிகை ருக்மிணி வசந்த் கண்டித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை.. இன்பதிர்ச்சியை கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

நடிகைகளின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து ருக்மிணி வசந்த் கண்டனம்:

நடிகை ருக்மிணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “திரையுலகில் உள்ள பெண்களாக, தொடர்ச்சியான பிரச்சினையை முடித்து வைப்பது நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். ஒரு பொது நிகழ்வுகளில் பெண் நடிகர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பொருத்தமற்ற கோணங்களில் இருந்து படமாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன, தேவையற்ற ஜூம்கள் எங்கள் வேலையை விட எங்கள் உடல்களை மையமாகக் கொண்டுள்ளன. இது சில தனிநபர்களால் நடத்தப்படும் இந்த நடத்தை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதையும் படிங்க: யூத் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – சுராஜ் வெஞ்சாரமூடு!

நாங்கள் எங்கள் திறமையாக சினிமாவில் இருக்கிறோம். வேண்டுமென்றே தேவையில்லாத ஜூம்-இன்கள் மற்றும் பொருத்தமற்ற கோணங்களை நாங்கள் கண்டிக்கிறோம். அவை கண்ணியத்தின் தெளிவான மீறல்கள் மற்றும் அவற்றை இயல்பாக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​முடியாது” என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ருக்மிணி வசந்த் பகிர்ந்துள்ளார்.

நடிகைகள் புகைப்படங்கள் அத்துமீறல் குறித்து நடிகை ருக்மிணி வசந்த் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி:

சமீபகாலமாகவே பல நடிகைகளின் புகைப்படங்கள், தேவையற்ற ஜூம் மற்றும் தேவையற்ற ஆபாச கோணங்களில் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. மேலும் நடிகைளின் புகைப்பங்கள் ஏ.ஐ மூலமும் தவறாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இது குறித்து பல நடிகைகளாலும் தங்களின் குரல் எழுப்பிவரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது நடிகை ருக்மிணி வசந்தும் இணைந்துள்ளார். தற்போது இவரின் பதிவிற்கு, பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.