மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் ஈரானின் இதய பகுதியான தெஹ்ரானில் அதிரடி வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் அதிபர் அலுவலகம் மற்றும் அந்நாட்டின் மிக உயரிய அதிகார அமைப்பான 'தேசிய பாதுகாப்பு கவுன்சில்' கட்டிடம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானிய ஆட்சியின் "மிக முக்கியமான மற்றும் மைய தலைமையகம்" மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காமேனியின் படுகொலையை தொடர்ந்து, ஈரானின் அதிகார மையங்களை முற்றிலும் சிதைக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்த துல்லியமான ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துள்ளது.
இந்த தாக்குதல் ஈரானிய ராணுவ கட்டமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் ஈரான், தனது தலைமை அலுவலகங்கள் மீதான இந்த நேரடி தாக்குதலுக்கு எத்தகைய பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.
இதனால் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Edited by Siva