கெணத்த காணோம் இயக்குனரின் குழந்தைக்கு படிப்பு செலவை ஏற்ற யோகிபாபு
CineReporters Tamil March 03, 2026 11:49 PM

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் கெணத்த காணோம். நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அதில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் யோகிபாபு பேசுகையில்,

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க சுரேஷ் சங்கையா விரும்பினார். ஆனால் அப்போது தேதிகள் பிரச்சனை, இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்துள்ளார். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன் என்றார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

cinereporters.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.