Top 10 News Headlines: சிலிண்டர் விலை உயர்வு.. சமூக வலைத்தளங்களுக்கு தடை.. 11 மணி செய்திகள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் March 07, 2026 01:44 PM
- சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 19 கிலோ எடை கொண்ட வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50-க்கு விற்பனையாகிறது.
- 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவில் விருப்ப மனு விநியோகம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர் நேர்காணல் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
- மழை மற்றும் பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை - இலங்கை காங்கேசன் துறை இடையே 4 மாதங்களுக்கு பின் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- இளைஞர்களின் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது.
- கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
- தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரத்தில் விஜய் அறிவிக்கவுள்ளார்.
- சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் நிலையில், வாரத்தில் 6 நாட்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
- திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் 3 மாதங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை துணி கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் இந்த தடை அமலுக்கு வரும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.