விலங்கு ஆர்வலர்களை நிலைகுலைய வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட மோதலில், ஒரு இளம்பெண் தனது ஆத்திரத்தை அப்பாவி நாய்க்குட்டிகள் மீது காட்டியுள்ளார். கொஞ்சமும் இரக்கமில்லாமல், பிஞ்சு நாய்க்குட்டிகளைச் சுவற்றில் அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இரண்டு நாய்க்குட்டிகளைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டு அராஜகம் செய்துள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் இரண்டு நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. வாயில்லா ஜீவன்கள் மீது இவ்வளவு வன்மத்தைக் காட்டிய அந்தப் பெண்ணின் வீடியோ இணையத்தில் பரவி, காண்போரைக் கதற வைத்துள்ளது. “கோபம் மனுஷங்க மேல இருக்கலாம், ஆனா பாவம் அந்த ஜீவன்கள் என்ன பண்ணுச்சு?” என நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை வறுத்தெடுத்து வருகின்றனர். மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடெங்கும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.