தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழல் திமுக கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறியும் மோதல் போக்கும் நீடித்து வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.