இளைஞர்கள் ஆதரவு அதிகமாக தவெக தலைவர் விஜய் அதிகமாக இருப்பதால் அவர் வரும் தேர்தலில் 02-வது இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றும், இண்டியா கூட்டணியின் தமிழகத்துக்கான நட்சத்திர பேச்சாளராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையை பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார் என்றும், அவரை மேற்கு வங்க ஆளுநராக மாற்றியதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, அங்கும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி இந்தத் தேர்தலில் 03-வது இடத்துக்குச் செல்லும் என்றும், பிஹாரில் கூட்டணிக் கட்சியை பாஜக கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல தமிழகத்திலும் அதிமுக என்ற கட்சிக்கு கடைசித் தேர்தலாக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதேவேளையில், இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக் கூடிய தவெக தலைவர் விஜய் நிச்சயமாக 02-வது இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.