“குறுக்கு வழிகளில் வந்தவர்களால் நான் பழிவாங்க பட்டேன்... ஸ்டாலின் தலைமையில் செயல்படுவதே என் வாழ்நாள் லட்சியம்”- ஓபிஎஸ்
Top Tamil News March 08, 2026 01:48 PM

மதுரை திருமங்கலம் அருகில் உள்ள ராயபாளயத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு மாற்றுக்கட்சியின் திமுகவில் இணையும் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தாய் உள்ளதோடு எங்களை இணைத்த முதல்வருக்கு நன்றி. தாய் கழகத்தில் இணைந்ததை பெருமை  கொள்கிறேன். 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொடுத்த பணிக்கு மனசாட்சியுடன், நன்றியுடன் பணியாற்றி உள்ளேன். அதிமுகவில் எனக்கு தனி அணியை உருவாக்கியதில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கினேன். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி இன்று அப்படியே இல்லை. அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக உள்ளது. குறுக்கு வழிகளில் வந்தவர்களால் நான் பழிவாங்க பட்டேன். பழிவாங்கப்பட்ட என்னை அன்போடு அணைத்துக் கொண்டவர் முதலமைச்சர ஸ்டாலின்


10 தோல்வி அல்ல. இனி வாழ்நாள் முழுவதும் அவர்கள் தோல்வியை தான் காண உள்ளார்கள். அதிமுகவில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது, திராவிடத்திற்கு மாறானது என்பதை உணர்ந்து தான் திமுகவில் இணைந்தேன். திமுகவில் இன்று ஒரு தொண்டராக தான் இணைந்துள்ளேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்ற அண்ணாவின் வரிக்கு சான்றாக எங்களை இணைத்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். திராவிட சித்தாந்ததை தொடர்ந்து 75 ஆண்டுகளாக திமுக காத்து வருகிறது. ஜெயலலிதாவின் விவேகத்தை கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் மதவாத அரசியல் வெற்றுப் பேச்சு. திராவிடமே இங்கு உயிர்மூச்சு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற சொல்லை நிறைவேற்றி காட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை போல பக்குவம் பெற்ற தலைவர் இந்தியாவிலேயே இல்லை. ஸ்டாலின் தலைமையில் செயல்படுவதே என் வாழ்நாள் லட்சியம். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.