ஐரோப்பா வரை பரவிய மத்திய கிழக்கு போர்.. நார்வே அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதலா?
Webdunia Tamil March 08, 2026 02:48 PM

மத்திய கிழக்கு போர் ஒன்பதாவது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல்கள் ஐரோப்பா வரை பரவியுள்ளன.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது. உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், இது திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மறுபுறம், பஹ்ரைனின் சல்மான் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கைக்கு பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் ஈரான் ஆதரவு குழுக்கள் குறிவைத்து வருகின்றன.

இதனால் அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போர் மத்திய கிழக்கை தாண்டி விரிவடைவது உலக நாடுகளிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே போலீஸ் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் ஒரு தற்கொலைத் தாக்குதல் முயற்சியாக இருக்குமோ என்ற கோணத்திலும் செய்திகள் அலசப்படுகின்றன.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.