பெங்களூருவில் மருத்துவமனை திறப்பு விழாவில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பொறுமையிழந்து அமைதியாக இருங்கள் சொன்ன வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர் பெங்களூருவில் கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் (கிம்ஸ்) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு புதிய வசதி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரைப் பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
திறப்பு விழாவின் நிகழ்ச்சியின் மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தினரிடமிருந்து, அதிக சத்தங்கள் வந்து திடீரென நிகழ்ச்சியை சீர்குலைத்தன. தொடர்ச்சியான கூச்சலால் அவர் பேச்சை பாதியிலேயே நிறுத்த கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து வந்த சத்தத்தால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ரசிகர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார்.
தெலுங்கில் பேசிய அவர், “தயவுசெய்து நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்க முடியுமா?" என்றார். பின்னர் அவர் ஆங்கிலத்தில் Quit.. Quit..Quit என்று மீண்டும் கூறினார். ஆரம்பத்தில் ஆரவாரம் தொடர்ந்தது, ஆனால் இறுதியில் கூட்டம் அமைதியானது. அரங்கம் அமைதியாகிவிட்டவுடன், ஜூனியர் என்.டி.ஆர் பதிலைப் புரிந்துகொண்டு, "நல்லது. நன்றி" என்றார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.
Debbaki andharu silent aipoyaru 💀🔥#NTR pic.twitter.com/FJAqsUr77v
— Salaarodu (@Tweets_pillodu) March 8, 2026