ஏழை விவசாயி வீட்டு திருமணத்தில் திடீரென கலந்து கொண்ட ராகுல் காந்தி.. பரபரப்பான சிறு கிராமம்..!
WEBDUNIA TAMIL March 10, 2026 06:48 PM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று காலை ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள மதினா கிராமத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகை அந்த பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திருமண விழாவிற்கு வந்த ராகுல் காந்தியை, காங்கிரஸ் எம்.பி. தீபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சாதாரண தொண்டர்கள் மற்றும் விவசாயிகளுடன் எளிமையாக உரையாடிய ராகுல் காந்தி, மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். விவசாயிகளுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி அவ்வப்போது இது போன்ற பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அவரது இந்த வருகையையொட்டி சோனிபட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.