தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்.. நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் - தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்!
Dinamaalai March 10, 2026 07:48 PM

தமிழக ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, ஒரே நாளில் 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளார்.

ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழகத்திற்கு 5 முக்கிய ரயில் சேவைகள் வழங்கப்பட உள்ளன. 

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத்: தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதிவேக வந்தே பாரத் ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத்: தொழில் நகரமான கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அதே போன்று சென்னை - மயிலாடுதுறை அதிவிரைவு ரயில்: டெல்டா மாவட்டங்களைச் சென்னைக்கு விரைவாக இணைக்கும் வகையில் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா: ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்க இந்த ரயில் உதவியாக இருக்கும். மதுரை - பெங்களூரு வந்தே பாரத்: மதுரையிலிருந்து தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவை இணைக்கும் மற்றுமொரு வந்தே பாரத் சேவை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

நாளை காலை நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் சென்னை எழும்பூர் மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நேரில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி டெல்லியிலிருந்தபடி பச்சைக்கொடி அசைத்து இந்தச் சேவைகளைத் தொடங்கி வைப்பார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.