அத்திவரதரை காண அலைமோதும் மக்கள் கூட்டம்... நீண்டவரிசையில் காத்திருந்தபோது பறிபோன உயிர்
Top Tamil News March 10, 2026 07:49 PM

கும்பகோணம் அத்தி வரதர் தரிசிக்க ஏராளமான நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் அத்தி வரதரை தரிசிக்க வந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் வேலூர் தத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயிரிழந்தார்.

கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பாதாள அறையில் இருந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்சு முதல் தேதி பக்தர்களுக்கு சேவை சாதிக்க வெளியே கொண்டுவரப்பட்டார். 12 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு சேவை சாதிக்க வந்த அத்தி வரதரை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் கும்பகோணத்திற்கு வந்தவாறு இருந்தனர். இன்று இரவு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு மீண்டும் அத்திவரதர் பாதாளரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென பெய்த மழையினால் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அத்தி வரதரைக்கான வேலூர் தத்துவாஞ்சேரியிலிருந்து சசிகுமார் என்பவர் தனது நண்பர்கள் ரமேஷ் மற்றும் ரமேஷ் பாபு என்பவரோடு கும்பகோணத்திற்கு வந்துள்ளார். கோவிலுக்கு வரும் வழியில் சசிகுமாருக்கு (55)மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சசிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சசிக்குமாரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.