மதிய உணவில் பல்லி... "அப்பா" எனும் பட்டத்திற்கு ஸ்டாலின் ஆசைப்படுவதெல்லாம் வெட்கக்கேடு- நயினார் நாகேந்திரன்
Top Tamil News March 11, 2026 02:48 AM

குழந்தைகளின் உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத கேவலப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டு, "அப்பா" என்னும் பட்டத்திற்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஆசைப்படுவதெல்லாம் மிகப்பெரும் வெட்கக்கேடு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு! கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது. 

மேடைகளில் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என நாடகமாடிவிட்டு, நிதர்சனத்தில் புழு, பூச்சி, பல்லி கிடக்கும் தரமற்ற சத்துணவை வழங்கி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் உயிர்களோடு விளையாடும் திமுக அரசு தமிழகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு! குழந்தைகளின் உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத கேவலப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டு, "அப்பா" என்னும் பட்டத்திற்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் மிகப்பெரும் வெட்கக்கேடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.