மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார் நடிகர் அஜித்குமார்..!
Seithipunal Tamil March 11, 2026 03:48 AM

அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவுகிறது.

மேலும், துபாய், பஹ்ரான் போன்ற நாடுகளில் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதாவது, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்பட்டது.

இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் கற் பந்தய வீரருமான அஜித் கார் பந்தயத்திற்காக டுபாயில் தங்கியிருந்தார். 

துபாய் அபுதாபி விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் சென்னை திரும்ப முடியாமல் துபாயில் சிக்கிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், துபாயில் இருந்து அஜித்குமார்  இன்று பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.