மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
TV9 Tamil News March 11, 2026 03:48 AM

பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக ஏராளமான திட்டங்களை அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலங்கள் மூலம் மூத்த குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் அசத்தலான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில், திட்டத்தை தொடங்கும்போது மட்டுமே முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்?.. மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை

ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்

ஐந்து ஆண்டுகள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.3 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த ரூ.3 லட்சத்திற்கு மொத்தமாக ரூ.1,23,000 வட்டியாக மட்டுமே கிடைக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தின் முடிவில் முதலீடு செய்த தொகை ரூ.3 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.1,23,000 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.4,23,000 கிடைக்கும்.

இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

தங்களது ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை பெறுவது அல்லது பணி ஓய்வு பணத்தை எங்கே பாதுகாப்பாக முதலீடு செய்வது என தெரியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.