பாட்ஷாவை விட அண்ணாமலைதான் பெஸ்ட்!… ரஜினிக்கே கிளாஸ் எடுத்த அந்த நடிகர்!…
CineReporters Tamil March 11, 2026 02:48 AM

ரஜினியின் சினிமா கெரியரில் பாட்ஷா, அண்ணாமலை, தளபதி, படையப்பா, சந்திரமுகி போன்ற படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ரஜினி வீரா, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.. இந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட்.. இதில் அண்ணாமலை 1992ம் வருடம் வெளியானது. அந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து அதாவது 1995ம் வருடம் பாட்ஷா வெளியானது..

ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக பாட்ஷா இருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் ரஜினி ஒரு டானாக நடித்திருந்தார். எனவே ஹீரோயிசம் செய்வதற்கு நிறைய காட்சிகள் அந்த படத்தில் இருந்தது. ரஜினியும் அதை பயன்படுத்திகொண்டார். இந்நிலையில்,
நடிகர் மணிகண்டன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

‘காலா படத்தில் நான் ரஜினி சாருடன் நடிக்கும் போது அவர் நடித்த படங்களை பற்றி என்னிடம் பேசுவார்.. மேலும் என்னுடைய எந்தெந்த படங்களையெல்லாம் நீங்கள் பார்த்தீர்கள்? உங்களுக்கு எதெல்லாம் பிடித்திருந்தது? எதெல்லாம் சரியில்லை?’ என்றெல்லாம் கருத்து கேட்பார்..

‘நீங்கள் நடித்ததில் அண்ணாமலை மிகவும் பிடிக்கும்’ என்று சொன்னேன். ஆச்சர்யப்பட்ட ரஜினி சார் ‘ஏன் பாட்ஷா பிடிக்கலையா?’ என்று கேட்டார்.. ‘பிடிக்கும் சார்.. பாட்ஷாவில் அவன் வில்லன்.. அவனை கொன்னுட்டா படம் முடிஞ்சிடும்… ஆனா அண்ணாமலையில் நண்பன். நண்பனை என்ன செய்ய முடியும்?’ என கேட்டேன். அதைக்கேட்டு ’என்ன சொல்றீங்க?’ என ஆர்வமாக கேட்டார்.

‘இல்ல சார்.. வீட்டோட டாக்குமெண்ட்ட அம்மாகிட்ட கொடுத்து இத அசோக்கிட்டயே கொடுத்திடுங்கன்னு சொல்லும் போது அண்ணாமலை என்ற சாதாரண மனுஷன் ரொம்ப உயர்ந்த மனுசனா மாறிடுறான்’ என்று சொன்னேன்.. அதைக்கேட்ட ரஜினி சார் அது அவரின் படம் என்பதையே மறந்து ‘ ஆமால்ல.. சூப்பர்’ என பாராட்டிக்கொண்டார்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.