கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரானை குறிவைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டு தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் முக்கிய இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.. அதில், ஈரானின் அதிபர் கமேனி கொல்லப்பட்டார். ஒருபக்கம் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, அபுதாபி பக்ரைன் உள்ளிட்ட இடங்களை ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது..
இதன் காரணமாக அந்த நாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது, ஏற்கனவே துபாய் விமான நிலையம் மூடப்பட்டதால் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு தவிக்கும் நிலை ஏற்பட்டது.. அதன்பின் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்..
ஆனாலும் போர் இப்போது வரை நின்றபாடில்லை. இந்நிலையில் இந்தாண்டு இறுதிவரை அபுதாபிக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது.
அபுதாபி மட்டுமில்லாமல் அம்மான், பஹ்ரைன், தோஹா, துபாய் மற்றும் டெல் அவீவ் ஆகிய இடங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த மாத இறுதிவரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது..