விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று திமுகவை தோற்கடிக்கவேண்டும் என விஜய் விரும்புகிறார். ஆனால், தவெகவுடன் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே, தவெக தனித்துப்போட்டியிடும் நிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என்று தவெக விரும்பியது. காங்கிரஸில் சிலர் தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.. ஆனால் 28 தொகுதிகளை வாங்கிக்கொண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்து விட்டது..
ஒருபக்கம் தவெகவை என்.டி.ஏ கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியும் நடப்பதாக செய்திகள் வெளியானது. அது நடக்குமா என்பது தெரியவில்லை.. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் தவெக தலைவர் விஜய் இறங்கிவிட்டார்..
பனையூர் அலுவலகத்தில் இன்று தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட வேட்புமணு கொடுத்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தினார்..அப்போது நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து விட்டேன் நீங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றெல்லாம் அவர் நிர்வாகிகளிடம் பேசியதாக செய்திகள் வெளியானது
.
மேலும் பெரம்பலூரில் போட்டியிட விருப்பமான அளித்த நிர்வாகி ஒருவரிடம் அந்த தொகுதிக்கு விரைவில் நானே வருவேன் என்று விஜய் சூசகமாக சொன்னதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அப்படி பார்க்கும் போது அநேகமாக சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என தெரிகிறது..