பிரபல நடிகராக இருந்து ஏராளமான ரசிகர்களை வைத்திருந்த நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறியதால் அவரின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி கவனிக்கப்படும் ஒன்றாக மாறியது. முதல் நிலை வாக்காளர்களும், இளைஞர்களும், குறிப்பாக பெண்களில் பலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள். எனவே அவர்கள் வாக்குகளை விஜய் வாங்குவார் என பல கருத்துக்கணிப்புகள் சொல்கிறது..
குறிப்பாக விஜய் தனித்துப் போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை வாங்குவார் என சிலர் பேசினார்கள். ஒரு பக்கம் கருத்துக்கணிப்பில் விஜய் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அதாவது, திமுக, அதிமுகவுக்கு பின் தவெக பெரிய கட்சியாக மாறியிருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் சரத்குமார் ‘விஜய்க்கு எந்த கொள்கையும் இல்லை.. கோட்பாடும் இல்லை.. அவர் 15 சதவீத வாக்குகளை வாங்குவார் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. ஆனால் அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமாட்டார்’ என சொல்லியிருக்கிறார்..