முதன் முதலா கேட்ட ரஜினி!.. அசத்திய ராதாரவி!. அண்ணாமலை படத்தில் சம்பவம்!…
CineReporters Tamil March 11, 2026 06:48 PM

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி. அப்பாவை போலவே திறமையான நடிகராக பார்க்கப்படுபவர். 80களிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்போது வரை சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் இவர்.. ஹீரோ வில்லன் காமெடி கதாபாத்திரம் குணசித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் அசால்டாக நடிப்பவர்தான் ராதாரவி..

பெரும்பாலும் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் வில்லனாக வருவார்.. ரஜினிக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை பல பேட்டிகளிலும் அவர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில்தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அண்ணாமலை படத்தில் நடித்தது தொடர்பாக ஒரு செய்தியை ராதாரவி சொல்லியிருக்கிறார்..

ரஜினி கூட நிறைய படம் நடிச்சிருக்கேன்.. ஆனா எந்த படத்திலும் என் நடிப்பு பத்தி அவர் எதுவும் பேச மாட்டார்.. எந்த ஐடியாவும் சொல்ல மாட்டார்.. ஆனால் அண்ணாமலை படம் பண்ணும் போது ‘இந்த படத்துல புதுசா ஏதாவது ஒரு மேனேரிசம் பண்ணுங்க’ என என்னிடம் கேட்டார்.

நான் பொதுவா கதை கேட்டு நடிக்க மாட்டேன்.. ரஜினி அப்படி கேட்டதால் இயக்குனர்கிட்ட போய் என் கதாபாத்திரம் என்ன என கேட்டேன்.. முழு கதையும் சொன்னார்.. அதன்பின்னால்தான் ‘கூட்டி கழிச்சு பாரு.. கணக்கு சரியா வரும்’ என்கிற வசனத்தை கொண்டு வந்தேன்.. அது ஒரு பழைய படத்தில் வந்த ஒரு சின்ன வசனம்தான்.. அதை மாடுலேஷன் மாற்றி வேறு மாதிரி சொன்னேன்.. ரசிகர்களுக்கும் அது பிடித்திருந்தது’ என சொல்லியிருக்கிறார்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.