ஆதவ் அர்ஜுனா ரஜினி பற்றி பேசியது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினியை மிரட்டி அவரை அரசியலுக்கு வராமல் திமுக தடுத்து விட்டது.. ஆனால் விஜய் யாருக்கும் பயப்படாமல் அரசியலுக்கு வந்திருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
ரஜினி யாருக்கும் பயப்படவில்லை.. யாருக்கும் பயந்து அவர் அரசியலில் இருந்து விலகவில்லை. ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே சொடக்குப்போட்டு பேசியவர்தான் ரஜினி. ஆதவ் அர்ஜுனா இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் பொங்கினார்கள்.. சமீபத்தில் தனது பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தமும் தெரிவித்தார். மேலும் யார் அரசியலுக்கு புதிதாக வந்தாலும் அவர்களுக்கு எதிராக மோசமான பிரச்சாரங்களை செய்து அவர்களை திமுக ஒடுக்க நினைப்பதைத்தான் நான் அப்படி குறிப்பிட்டேன் என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இயக்குனரும், ரஜினியின் ஆதரவாளருமான பிரவீன் காந்தி ஊடகம் ஒன்றில் பேசிய போது விஜய மிகவும் விமர்சித்து பேசினார்.. சிம்பு மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் இன்னைக்கு விஜய்னு ஒருத்தன் இருந்திருக்கவே மாட்டார்.. விஜய் கிட்ட எந்த திறமையும் இல்ல. எல்லா படத்திலும் ஒரே மாதிரி நடிச்சி மக்களை ஏமாற்றினார்.. இப்ப அதேமாதிரி அரசியலுக்கு போய் தமிழ் மக்களை ஏமாத்திட்டு இருக்காரு.. அவருக்கு ரஜினி பத்தி பேச எந்த தகுதியும் இல்லை’ என பொங்கியிருக்கிறார்..