மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் சாம்ரெஃப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதி அராம்கோ மற்றும் எக்ஸான்மொபில் இடையேயான இந்த கூட்டு முயற்சியில் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எரிசக்தி மையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் சர்வதேச எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளது.
கத்தாரில் உள்ள ஆர்.என்.ஜி மையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சவுதி அரேபியா தனது தற்காப்பு உரிமையை பயன்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. பாரசீக வளைகுடா நாடுகளின் 31 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Edited by Siva