நடிகரும், தவெக தலைவருமான விஜய் கரூருக்கு சென்ற போது பலரும் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.. ஏற்கனவே விஜய் இரண்டுமுறை டெல்லிக்கு சென்று சிபிஐ விசாரணையில் கலந்துகொண்டார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பான பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
மேலும், கடந்த 15ம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போதும் சிபிஐ அதிகாரிகள் எழுதிய பல முக்கியமான கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்தால் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கலந்துகொள்கிறேன் என அவர் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் 15ம் தேதி விசாரணை முடித்துவிட்டு மாலை 5.30 மணி விஜய் வெளியே வரும்போது சிபிஐ அலுவலகத்தின் வெளியே அவரை பார்ப்பதற்காக கூடியிருந்த விஜய் ரசிகர்களுக்கு கைகாட்டிக் கொண்டு சிரித்துக்கொண்டே உற்சாகமாக போனார் விஜய்.

மேலும் அன்று காலை அவர் விசாரணைக்கு உள்ளே சென்றபோதும் அங்கே சிபிஐ அதிகாரிகளின் மகன்கள், பேரன்கள் விஜயை பார்ப்பதற்காக காத்திருந்தார்களாம். விஜயை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் ‘சார் உங்களுடன் ஒரு செல்பி’ என பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது..