ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம், முதல் நாளிலேயே வசூல் வேட்டையை துவங்கியுள்ளது.
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்திற்கான சிறப்பு பிரிமியர் காட்சிகள் நேற்றிரவு திரையிடப்பட்டன. இந்த பிரிமியர் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பின் காரணமாக, உலகளவில் வெறும் பிரிமியர் காட்சிகளின் மூலமாக மட்டுமே இப்படம் ரூ. 52.71 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்தின் பிரிமியர் காட்சிக்கு இந்த அளவிலான வசூல் கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அதே வேலை இன்று காலை திரையரங்குகளில் வெளியான முதல் காட்சிகளுக்கும் அதிகளவில் ரசிகர்கள் குவிந்தவணணம் இருந்தனர். இன்று வெளியான முதல் காட்சியில் மட்டும் உலகளவில் சுமார் ரூ. 17.07 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிமியர் ஷோ மற்றும் இன்றைய காலைக் காட்சிகளின் வசூல் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் முதல் நாளிலேயே எளிதாக ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.