பகீர் சம்பவம்! வாயைப் பொத்தி இளம்பெண்ணைத் தூக்கிச் சென்ற வாலிபர்.. விரட்டிப் பிடித்த கிராம மக்கள்.. நள்ளிரவில் நடந்தது கொடூரம்..??
SeithiSolai Tamil March 20, 2026 12:48 AM

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் செல்வம், ஒரு வீட்டின் உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக வெளியே தூக்கிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், செல்வத்தைப் பிடித்து தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.